Friday, August 27, 2010

மரங்களின் மகிமை

மரங்களின் மகிமை (தந்தை மகனுக்கு...)

ஆ.திருநாவுக்கரசன்
மரங்களின் மகிமை பற்றி
அவசியம் உனக்குச்
சொல்ல வேண்டும்.
மனிதன் உறிஞ்சிய நீர்
சிறுநீர் அல்லது வியர்வை;
மற்றவருக்கு நிழல் தரும்
மரங்கள் உறிஞ்சிய நீர்
பூக்கள் மற்றும் கனிகள்!
மரங்களை மதித்தோமா நாம்?
காடுகள் மழிப்பு
கண்மாய்கள் அழிப்பு
ஓசோனில் ஓட்டை
இப்படியே போனால்
இரண்டாயிரத்து எழுபதில்
இருக்காதாம் தண்­ர்!
ஒரு குவளை தண்­ருக்கு
ஒரு கொலையே நடக்கும்
மரங்கள் மொட்டையாகும்
மனிதரெல்லாம் வழுக்கையாவார்;
மரத்தில் தூளியாடி
மகிழ்ந்த நிகழ்வெல்லாம்
முறத்தால் புலி துரத்திய
புறநானூற்றுப் பாடலாய்
இலக்கியத்தில் மட்டுமே
இருக்கும் இனி!
வகுப்பறையில்
வரலாற்றுப் பாடத்தில்
பூமியில் இருந்து - பின்பு
காணாமல் போன பட்டியலில்
தண்­ர் முதலிடத்தைத்
தக்கவைக்கும் எப்போதும்!!
சம்பளம்
தண்­ரின் அளவில்
தரப்படலாம்!
தொழிற்சங்கங்கள்
போராட்டம் நடத்தும்
புதிய சம்பளத்தை
எந்நூறு லிட்டர் தண்­ர்
என்று குறிக்கக் கோரி
போனசாகத் தண்­ர்க் கோரி
போராட்டம் நடக்கும்!
குழாயடியில்
குடுமிபிடி சண்டை இராது
தமிழகமும் கர்நாடகமும்
தண்­ருக்காகச்
சண்டையிடாது!
மாப்பிள்ளை வீட்டார்
வரதட்சிணையில்
ஐந்து குடம் தண்­ர்
அதிகமாகக் கேட்கலாம்?
ஒத்துக்கொள்வதோ
பத்துக் குடம்
அதற்கே விழிபிதுங்க
அதிகம் ஐந்து குடத்திற்கு
எங்கே செல்வார்?
தாகம் தீரத்
தண்­ர்க் குடிப்பது
ஆட்சியாளருக்குக்கூட
ஆடம்பரம் ஆகிப்போகும்?
ஒரு குவளைத் தண்­ர் இருந்தால்
உள்ளூர்ப் பணக்காரர்;
ஒரு குடம் வைத்திருந்தால்
உள்நாட்டுப் பணக்காரர்;
ஒரு அண்டா வைத்திருந்தால்
உலகப் பணக்காரராய்
வலம் வரலாம்!
மூடி வைத்திருந்த மனிதன்
பரிணாமத்தின் படியாய்
குறிக்கப்படுவான்?
முகில் என்று - காதலி
முடியைப் பாட முடியாது,
முகிலும் இருக்காது
முடியும் இருக்காது
தலையெழுத்தைப் படிக்க
தடையிருக்காது - பாவம்
முடிதிருத்தும் தொழிலாளி?
மனிதர் எல்லாம்
திருப்பதி சென்று
திரும்பியவர் போல
திரிந்து அலைவார்!
துச்சாதனன் பாவம்
பிடித்து இழுத்து வர
பாஞ்சாலிக்கு கூந்தல் இருக்காது!
பாஞ்சாலியும் பாவம்
அவிழ்த்து சபதமிட
அவளுக்கும் கூந்தல் இருக்காது!
முதல் கல்யாணமே
அறுபதாம் கல்யாணம் போல
முதிர்ந்த தோற்றத்தில்
மணப்பெண்ணும் மாப்பிள்ளையும்....
திருமணச் சடங்கில்
மாலைகள் என்பது
வழக்கொழிந்த விசயமாகும்!
இறந்தவர் சடலத்திற்கு
இறுதி அஞ்சலிக்கும்
மலர் இருக்காது!
சைவம் மட்டுமே
சாப்பிடுவோர் பாவம்
உண்டு வாழ
ஒன்றும் இராது
சதை உண்பதையும்
சைவம் உண்பதாய்
சகித்தால் மட்டுமே
உயிர் வாழ்க்கைச் சாத்தியம்?
இப்போதே விழிக்கச் செய்
இயற்கையை அழித்தல் தடு
மறுத்துவிட்டால்,
நீண்டு கிடக்கும் நெடுஞ்சாலையில்
மாண்டு கிடக்கும் நாய் போல
மதிப்பற்றுப் போகும்
மனித வாழ்க்கை!
விழித்தெழாத மனிதனை
பழித்தெழுதும் வரலாறு
இயற்கையை அழித்தது
இந்த நாட்டுமிராண்டிதான் என்று!
ஆகவேதான்
நீயும் விழி
நின் சுற்றமும் விழிக்கச் செய்!

வைரமுத்துவின் "காதலித்து பார்"

Friday, August 13, 2010

India in 2020...................................?

online galatta
      

2020-ல் இந்தியா?

கூடல்
அர்த்தநாரீஸ்வரரின் ஆளுகைதான் இங்கு
எங்கும் தலைவிரித்து ஆடுகிறதோ என்று
எண்ண தோன்றுகிறது.
"மேல் தட்டு மன்னர் - அடித்தட்டு மக்கள்
விண்வெளி வெள்ளோட்டம் - வயல்வெளி வெள்ள ஓட்டம்
வெள்ளம் - வறட்சி"
இன்னும் பட்டியல் ஏராளம்,
2020-ல் இந்தியா?
இந்திய தேசம் வல்லரசு ஆகிவிடலாம்,
ஆனால் என் இனத் தமிழன் அன்றும் ஏர்பூட்டி
வயற்காட்டிற்குத்தான் நடந்து கொண்டிருப்பான் .
"அவன் அடுத்த வேலை சோற்றுக்கு!"
"அவன் கண்டவையோ ஏராளம்,
வறட்சியில் பட்டினிச்சாவு,
வெள்ளத்தில் பொட்டலச்சோறு,
அழுகிய பயிர்கள், உணவிற்கு எலிக்கறி,
இன்னும் எத்தனையோ!"
"எல்லாவற்றையும் தாண்டி,
அவன் தன் வாழ்க்கையை தொடங்கிய தொலைவிலேதான்
இன்றும் இருக்கிறான், முன்னேற்றம் இன்றி!
"தமிழகத்தின் மீது சோக ரேகைகள்
இன்றும் படர்ந்து கொண்டுதான்
இருக்கின்றன - வறண்ட நதிகளாய்!"
இந்தியா முன்னேறுகிறது?
ஆம் இந்தியா முன்னேறுகிறது.
"மென்பொருள் தயாரிக்கும் இந்தியனுக்கோ
மாதத்திற்கு பல லகரங்கள்,
உணவுப்பொருள் உற்பத்தியாக்கும்
இந்தியனுக்கு?
வருடந்தோறும் அரசாங்கம் தரும்
இழப்பீட்டு தொகைதான் - அவன்
வருட வருமானமோ?....."
"உழவனின் அரிசி என்ன
அற்பமாகிவிட்டதா?
மறந்துவிட்டாயா மனிதனே,
உன் இறப்பிலும் கூடவருவது
வாய்க்கரிசிதான்!"
தோழனே, நம் நாடு 2020-ல் வல்லரசாகிவிடும்,
அதில் ஐயமில்லை - அன்று
நம் உழவுத்தோழனை
சிற்றரசனாக்க வேண்டாம்,
ஒரு சராசரி மனிதனாகவாவது
அவன் களிப்பாக வாழட்டுமே?

இது திருடப்பட்டது கவிதை....